Donations.
இதுபோன்ற படங்களை இணைய தளங்களில் நீங்கள் பார்க்கலாம்
இந்தப் படங்களில் உள்ளவர்கள் ஏழைகள் , அனாதைகள் ,ஆபிரிக்க ஆசிய நாட்டவர்கள் அல்லது இந்தியா பாகிஸ்தான் இலங்கை போன்ற ஏதாவது ஒரு நாட்டவர்கள் என்று என்று எண்ணுவதை தவிர்த்து,
இந்தப் படத்தில் உள்ளது நான் அல்லது என்னுடைய மகன் அல்லது மகள் அல்லது பேரன்-பேத்தி , என்னுடைய சகோதரன் அல்லது சகோதரி அல்லது என்னுடைய அன்பான- நெருங்கிய உறவினர்கள் என்று ஒரு தடவை சிந்தித்துப் பாருங்கள்
அந்த சிந்தனையில் நீங்கள் ஒரு கணம் அமைதியை உணர்வீர்கள் அந்த அமைதி அல்லது மௌனம் என்பதே நாம் தேடும் உண்மை
அந்த அமைதி அல்லது மௌன அல்லது உண்மை நிலையிலிருந்தே இரக்கம் கருணை நேயம் அன்பு என்பவை தோன்றி ஊற்றெடுக்கின்றன. எம்மை அறியாமலேயே எமது மூளையில் அல்லது சித்தத்தில் சில மாற்றங்கள் நடந்து தூய்மை படுத்தல் நிகழ்கின்றது.
எந்தவிதமான சுயநல நோக்கமும் இல்லாமல் பணம் புகழ் மற்றும் வேறு எதிலும் கவனம் செலுத்தாமல், நன்மை செய்ய வேண்டும் என்பதற்காகவே தொண்டு செய்பவன் தான் சிறப்பாகப் பணியாற்றுகிறான். இத்தகைய மனநிலையில் ஒருவன் பணியாற்றவல்லவனாகும்போது, அவன் ஒரு புத்த பகவான் ஆகிவிடுவான். உலகத்தையே மாற்றி அமைக்கக்கூடிய வகையில் வேலை செய்யும் சக்தி அத்தகையவனிடமிருந்து வெளிப்படுகிறது.
— சுவாமி விவேகானந்தர்
வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன். தனி மனிதனுக்கு உணவில்லையேல் ஜகத்தினை அழித்திடுவோம்.
![]() |
![]() |
எமது நோக்கம்
ஆப்பிள் (Apple) நிறுவனத்தை உருவாக்கிய Steve Jobs தனது சுருக்கமான கதைகள் மூன்றை இங்கு கூறுகின்றார். முடியுமானால் இந்தப் பேச்சு முழுவதையும் கேளுங்கள். https://www.youtube.com/watch?v=UF8uR6Z6KLc
அதில் முக்கியமானது … அவர் கல்லூரியில் படித்தபோது பணம் இல்லாததால்…
….சக மாணவர்களின் விடுதி அறையில் தரையில் படுத்து உறங்கி இருக்கின்றார்
….பணத்திற்காக குளிர்பான வெற்று போத்தல்களை சேகரித்து பணம் பெற்றிருக்கின்றார்
….வாரம் தோறும் ஹரே கிருஷ்ணா மையத்தில் கிடைக்கும் இலவச உணவுக்காக பல மைல்கள் கால் நடையாக நடந்திருக்கின்றார்
பசியால், பணம் இல்லாததால் இதுபோன்ற பல துன்பங்களை நம்மில் பலர் அனுபவித்திருக்கின்றோம். இன்றும் பலர் இதுபோன்று வாடிக் கொண்டுதான் இருக்கின்றார்கள்.
அதற்கு நாம் என்ன செய்யலாம் என்று சிலர் சிந்தித்ததன் விளைவுதான் இந்த இணைய தளம்.
இரக்க குணமுடைய தமிழர்களை ஒன்றிணைத்து “பசியற்ற கிராமங்களை” உருவாக்க முயல்வதே எமது நோக்கம்.